Posts

நான் ரசித்த 96

96 முன்னுரை :                                       இவை முழுதும் என் பால், எனை  ஈர்த்த விடயங்கள். இது 96 எனும் திரைப்படத்திற்கு நான் உரைக்கும் விமர்சன உரை அல்ல.  தனித்து ஓர் இடத்தில் அமைதியை நாடாது எங்கு போகிறோம் எதற்கு ஓடுகிறோம் என செய்வதறியாது சுற்றும் என் சிந்தைக்கு, - நில் , சற்று பொறுமை கொள், ஓடுவதே வாழ்க்கை அல்ல, சுற்றி பார், உலகை ரசி , உணர்வை ரசி என பாடம் சொல்லி கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கிற ஒரு பார்வைக்குரிய கவிதை புத்தகம் எனக் கூற..!!                                   இதற்க்கு முரண்பாடு கண்டிப்பாக உண்டு, ஓர் ஆய்வுகூறிகைக்கு மாற்று கூற்று என்பது நியதி, அதுவே  ஒரு புது அறிவியல் கூற்றுக்கு  மூலதனம். அவை தான் அறிவியலார் கருத்து. அவர்களது கருத்தே, எனது ஒப்பம். அனால், இக்கட்டுரை ஓர் ஆய்வறிக்கை அல்ல, இது ஒரு மிக குறுகிய அறிவுள்ள ரசிகனின் ரசனை கூற்று என கூறுவது சற்று மிகை என தோன்றினும், அவையே மெய்யுமாகி போனது என்பதை ஏற்க சற்று  இயலாத விடயமாக தோன்ற காரணம் பல இங்குண்டு .                                   இருப்பினும் இப்பதிவு ஏன்? வேண்டாத  கால விரயம் எனில், எழுத்தும் சிந்தனைய